என்பிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, வாகைத் தமிழிலக்கிய மன்றத்தின் பொதுவான நோக்கங்கள்
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சி, மாணவர்களின் மொழித்திறன் மேம்பாடு, பண்பாட்டு விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயற்படும் மன்றமாக வாகைத் தமிழிலக்கிய மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மன்றம் என்பிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் மொழிப் பற்றை வளர்த்துத் தமிழின் செழுமையை உணர்த்தும் முக்கியக் கருவியாகச் செயல்படுகிறது.
தமிழ் மொழி வளர்ச்சி
தமிழ் மொழியின் தனித்துவமும், வளமும், இலக்கணக் கட்டமைப்பும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, மொழிப்பற்று வளர்க்கப்படும் நயமான தமிழ் நடையை உருவாக்குதல் மன்றத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று.
இலக்கியத்தில் ஆர்வத்தை ஊக்குவித்தல்
சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பல்வேறு வகைநூல்களை மாணவர்கள் அறிந்து, அவற்றின் செழுமையைப் புரிந்துகொள்ள வழிவகை செய்வது. தமிழிலக்கியப் பெரியோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.
திறன் மேம்பாடு
மாணவர்களின் திறனை மேம்படுத்த கவிதை, கட்டுரை, உரைநடை, எழுத்துத் திறன், வாசிப்புத் திறன், பேச்சுத் திறன் போன்ற மொழித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யது வெற்றியாளர்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது.
தமிழ்ப் பண்பாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
தமிழர்களின் பாரம்பரிய கலைகள், பண்பாட்டு மரபுகள், சமூகப் பழக்கவழக்கங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பண்பாட்டு அடையாளத்தை மாணவர்களில் வலுப்படுத்துதல்.
தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு வளர்த்தல்
நிகழ்ச்சி திட்டமிடல், ஒருங்கிணைப்பு, குழுப்பணி, நிர்வாகத் திறன் போன்ற தலைமைத்துவக் குணங்களை மாணவர்களிடம் உருவாக்குதல். தமிழை மையமாகக் கொண்டு சமூகப் பொறுப்பை உணர்த்தும் செயல்பாடுகளையும் மன்றம் முன்னெடுக்கும்.
ஆய்வறிவும் விமர்சன மனப்பாங்கும் மேம்படுத்துதல்
இலக்கியங்களை ஆராயும் திறன், விமர்சனப் பார்வை, பகுத்தறிவு திறன்களை வளர்த்தல்; இலக்கிய ஆய்வுச் செயல்பாடுகளுக்கான தளத்தை உருவாக்குதல்.
நவீன தகவல் தொழில்நுட்பம் ஊக்குவிப்பு
தமிழ் டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவித்து வலைத்தளம், சமூக ஊடகங்கள், ஈ – கற்றல் தளங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழிலக்கியப் பரவலை விரிவுபடுத்துதல்.
நிறைவாக
தமிழிலக்கிய மன்றம், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை மாணவர்களிடம் விளக்கி, மொழி, பண்பாடு, கலை, சமூகப் பொறுப்பு, தலைமைத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான தளமாக செயல்படுகிறது. இம்மன்றத்தின் செயல்பாடுகள், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மாணவர் சமூகத்தின் அறிவத்திறன் மேம்பாட்டுக்கும் பயனுள்ளதாக அமைவதே அதன் பிரதான நோக்கமாகும்.

